Every dream starts

Bengaluru-ல இருக்கிற 32 வயசு project engineer ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ₹5 lakh personal loan வாங்கினாரு. Lender-ஓட brochure-ல rate "12% per annum" அப்படின்னு போட்டுருந்துச்சு. 36 months-ல அவங்க மொத்தம் திருப்பி கட்டின amount ₹6.8 lakh. இது normal தான்னு அவரு நெனச்சாரு- மூணு வருஷத்துல ₹5 lakh loan-க்கு ₹1.8 lakh interest-ன்றது, 12% rate-க்கு ஓரளவுக்கு சரியா ஒத்துப்போற மாதிரிதான் அவருக்கு தோணுச்சு.

ஆறு மாசத்துக்கு அப்புறம், இதே loan amount-ஐ வேற lender-கிட்ட அதே 12%-ல வாங்கிட்டு இருந்த அவரோட friend-கூட compare பண்ணி பார்த்தப்பதான், அவரோட friend மொத்தம் ₹6.1 lakh தான் கட்டியிருக்காரு-ன்ற விஷயம் தெரிஞ்சுது. அப்போதான் இவருக்கு வித்தியாசம் புரிஞ்சுது. இவரோட "12%"ன்றது flat rate. ஆனா அவரோட friend-ஓட "12%"ன்றது reducing balance rate. இந்த ரெண்டு numbers-ம் ஒரே மாதிரியான product கிடையாது. Interest calculation பண்றதுல இது mathematical-ஆ வேற வேற முறைகள். ஒரே headline interest number-ஆ இருந்தாலும், Reducing balance-ஐ விட flat rate-ல வட்டி கிட்டத்தட்ட double ஆகும்.

நம்ம ஊர் retail lending business-ல borrower-க்கு விவரம் தெரியாது-ங்குறதை பயன்படுத்திதான் இப்படி பண்றாங்க. இந்த மூணு terms-க்கு உண்மையில் என்ன அர்த்தம், எந்த ஒரு loan offer-லயும் rate-ஐ எப்படி புரிஞ்சுக்கணும்-னு இப்போ பார்ப்போம்.

Interest rate கணக்கிடும் மூணு முறைகள்

Reducing balance rate. இதுல ஒவ்வொரு மாசமும் உங்க outstanding principal, அதாவது நீங்க இன்னும் திருப்பிக் கட்ட வேண்டிய அசல் தொகைக்கு மட்டும்தான் interest போடுவாங்க. நீங்க ஒவ்வொரு EMI கட்ட கட்ட, அதுல வட்டிப்பங்கு குறைஞ்சுகிட்டே வந்து, அசல் அடைக்கிற பங்கு அதிகமாகிட்டே போகும். எல்லா major home loans, PSU மற்றும் பெரிய private banks-ல தர்ற personal loans, gold loans, அப்புறம் credit-card EMI conversion-ல எல்லாம் இந்த முறைதான் பயன்படுத்தப்படுது.

சாதாரண பொருளாதார ரீதியா பார்த்தா, இதுதான் loan-க்கான "உண்மையான" rate. ஒரு home loan "8.5%"-னு சொன்னாங்கன்னா, அது பெரும்பாலும் reducing balance rate-ஆ தான் இருக்கும்.

Flat rate. இதுல ஒவ்வொரு மாசமும் உங்களோட ஆரம்ப original principal தொகைக்கு தான் interest போடுவாங்க, outstanding-க்கு கிடையாது. நீங்க எவ்வளவு அசல் தொகைய அடைச்சிருந்தாலும், கடைசி வரைக்கும் மாதாந்திர வட்டி மாறாம அப்படியேதான் இருக்கும். இந்த முறை சில commercial vehicle loans, equipment finance, சில NBFC personal loans மற்றும் tractor, two-wheeler loans-ல அதிகம் பயன்படுத்தப்படுது.

Flat rate பாக்குறதுக்கு கம்மியா தெரியும், ஆனா அதுலதான் ஏமாந்துடுவோம். 3-year tenure-ல ஒரு "12% flat" loan-ன்றது, கிட்டத்தட்ட 22% reducing balance loan-க்கு சமம். Tenure-ஐ பொறுத்து இந்த ratio மாறும்.

APR (Annual Percentage Rate). இது interest rate-கூட processing fees மற்றும் இதர one-time charges-ஐயும் சேர்த்து, ஒரு வருஷத்துக்கான கணக்கா காட்டும் ஒரு standardised rate. ஒரு loan-ஐ இன்னொரு loan-கூட சரியா compare பண்ண APR தான் உதவிகரமா இருக்கும். நம்ம ஊர் retail loans-ல APR-ஐ பெருசா வெளிய சொல்றது இல்ல; சில fintech apps பண்றாங்க. April 2024-ல இருந்து கட்டாயமாக்கப்பட்ட RBI-யோட Key Facts Statement (KFS) விதிமுறைப்படி, எல்லா செலவுகளையும் சேர்த்து இந்த ஆல்-இன்-ஒன் cost-ஐ lender காட்டணும்.

கணக்கை புரிஞ்சுப்போம், மூணு உதாரணங்கள் மூலமா

Example A: ₹5 lakh loan, 12% reducing balance-ல, 3-year tenure.

Monthly EMI: கிட்டத்தட்ட ₹16,610. Total amount paid: ₹5,98,000. Total interest: ₹98,000. Effective annualised cost: சுமார் 12%.

Example B: ₹5 lakh loan, 12% flat rate-ல, 3-year tenure.

ஒரு வருஷத்துக்கு 12% flat-ல வட்டி: ₹60,000. 3 வருஷத்துக்கு total interest: ₹1,80,000. Monthly EMI: (₹5,00,000 + ₹1,80,000) ÷ 36 = ₹18,889. Total amount paid: ₹6,80,000.

ரெண்டுக்கும் headline "12%" தான். ஆனா total cost-ல ₹82,000 வித்தியாசம் வருது பார்த்தீங்களா.

Example C: ₹5 lakh personal loan, 12% reducing balance + ₹15,000 processing fee + ₹2,700 GST on processing fee.

உங்க interest math எல்லாம் Example A மாதிரிதான் இருக்கும். ஆனா, மத்த charges-லாம் சேர்த்து APR பார்க்கும்போது, இந்த loan-க்கான APR கிட்டத்தட்ட 13.4% ஆகும்.

எந்த ஒரு loan offer-ஐயும் எப்படி செக் பண்ணனும்?

கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி borrower பண்ண வேண்டிய 3 முக்கியமான checks.

1. Headline rate வந்து reducing balance-ஆ இல்ல flat-ஆ-னு உறுதி பண்ணிக்கோங்க. இத எழுத்துப்பூர்வமா கேட்டு வாங்குங்க. இதுக்கான பதில் ஒரே வார்த்தையில இருக்கணும். ஒருவேளை பதில் "reducing balance" தவிர வேற எதுவாக இருந்தாலும், அதோட reducing-balance equivalent எவ்வளவுன்னு கேளுங்க. Lender அதுக்கு பதில் சொல்ல தயங்குனாலோ இல்ல "ரெண்டும் ஒன்னுதான்"னு சொன்னாலோ, அங்க loan வாங்காதீங்க.

2. Key Facts Statement (KFS) கேளுங்க. April 2024 முதலே, RBI-யோட விதிமுறைப்படி regulated lenders எல்லாரும் loan குடுக்கும்போது ஒரு 1-page KFS குடுக்கணும். அதுல interest rate, processing fees, GST, prepayment conditions, total amount payable என எல்லா விபரங்களும் அடங்கியிருக்கணும். இத வச்சுதான் நீங்க மத்த offer-ஐ சரியா compare பண்ண முடியும். KFS தரலனா, கேட்டு வாங்குங்க.

3. Total amount payable எவ்வளவுன்னு கணக்கு போடுங்க. Rate calculation முறையை தாண்டி, முழு tenure-முடியும்போது நீங்க எவ்வளவு கட்டப்போறீங்க அப்படின்ற இறுதி தொகைதான் முக்கியம். Reducing balance, flat, APR-லாம் இந்த தொகையை கண்டுபிடிக்கிற வழிகள்தான். கடைசில நீங்க கட்டப்போற தொகைய வச்சு முடிவெடுங்க.

இந்த வட்டி ஏமாற்றங்கள் எங்கே அதிகமாக நடக்கும்?

Flat vs Reducing வித்தியாசம் தெரியாததை பயன்படுத்தி ஏமாத்த வாய்ப்புள்ள மூன்று loan categories.

Commercial vehicle மற்றும் tractor loans. இங்க பெரும்பாலும் flat-rate தான் சொல்லுவாங்க. ஒரு truck finance company "11% flat"-னு சொன்னா, tenure-ஐ பொறுத்து அதோட நிஜமான reducing-balance rate 19-21% வரைக்கும் இருக்கும். ஆனா borrower நமக்கு கம்மி வட்டிக்கு கிடைச்சிருக்குன்னு நினைப்பாங்க.

dealer மூலமா வாங்குற Two-wheeler மற்றும் used-car loans. Dealer-கிட்ட இருக்குற financing partner, reducing-க்கும் flat-க்கும் இருக்குற வித்தியாசத்தை தெளிவா சொல்லாமலே flat rate-ஐ கோட் பண்ணிடுவாங்க. இதே buyer ஒரு bank-க்கு போயிருந்தா அவங்களுக்கு reducing balance சாய்ஸ் கிடைச்சிருக்கும்.

NBFC-ல தர்ற Small-ticket personal loans. சில NBFC-கள் flat rate-ஐயும் அல்லது மாதாந்திர வட்டியையும் (உதாரணத்துக்கு, "மாதத்திற்கு 1.5%") சொல்லுவாங்க. கேட்குறதுக்கு 1.5% கம்மியா தெரிஞ்சாலும், வருஷத்துக்கு கணக்கு பண்ணா அது 18% ஆகும். அதுவே flat basis-ல இருந்தா, அதோட effective reducing equivalent 32-34%க்கு போயிடும்.

சரியான Loan-ஐ தேர்வு செய்ய Checklist

Loan agreement-ல sign பண்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க:

  • உங்ககிட்ட சொல்லப்பட்ட rate reducing balance-ஆ, flat-ஆ, இல்ல per-month-ஆ? இத எழுத்துப்பூர்வமா (in writing) வாங்குங்க.

  • Processing fee எவ்வளவு? Processing fee-க்கான GST எவ்வளவு?

  • முழு tenure முடியும்போது கட்டவேண்டிய total amount payable எவ்வளவு?

  • உங்களோட APR அல்லது KFS-ல போட்டுருக்கிற all-in cost எவ்வளவு?

  • Prepayment அல்லது foreclosure charges என்ன? (1 January 2026 அத்தோடு அதற்கு அப்புறம் தனிநபர்களுக்கு வழங்கப்படும் floating-rate retail loans-க்கு, RBI-யின் 2025 Pre-payment Charges Directions படி எந்த ஒரு prepayment charges-ம் வசூலிக்கக் கூடாது.)

  • EMI bounce charge என்ன? Late payment penalty எவ்வளவு?

வெறும் headline rate நல்லா இருந்து, மத்த மத்த charges-ல அதிகமா இருந்தா, அது அதிக வட்டி உள்ள மத்த clean terms loans-ஐ விடவும் செலவு இழுத்துடும். கடைசியா நாம கட்டப்போற மொத்த தொகைதான் உண்மையான கணக்கு.

"ROI" விளம்பரங்கள் பத்தின ஒரு எளிய குறிப்பு

சில lenders விளம்பரங்கள்ல "Rate of Interest (ROI)" அப்படிங்குற வார்த்தையை மட்டும் பயன்படுத்தி, அது என்ன டைப்-னு சொல்லாம விட்டுடுவாங்க. ஒரு NBFC- ஓட personal loan விளம்பரத்துல "ROI 9.99%" அப்படின்னு இருந்தா, அவங்க கணக்குப்படி அது flat-ஆவோ, monthly-ஆவோ இல்ல reducing-ஆவோ கூட இருக்கலாம். Borrower-ஆன நீங்கதான் கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி இத எழுத்துப்பூர்வமா தெளிவுபடுத்திக்கணும்.

முக்கியமான விஷயம். நம்ம ஊர் retail loan-ல சொல்லப்படுற "headline rate" சில சமயம் உண்மையான வாடகையா இருக்கும், ஆனா பல நேரங்கள்ல அதுல பாதி செலவு மறைக்கப்பட்டிருக்கும். ஒரே headline number-ஆ இருந்தாலும் flat-ல வட்டி கட்டும்போது, reducing-balance விட கிட்டத்தட்ட double-ஆகும். April 2024 முதல் அமலுக்கு வந்த RBI-யோட Key Facts Statement விதிமுறை, borrower-க்கு கிடைச்ச ஒரு பெரிய ஆயுதம். அதை கேட்டு வாங்கி, முழுசா படிச்சு பார்த்து, all-in-cost-ஐ கம்பேர் பண்ணி முடிவெடுங்க.

இந்த கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டது; இது எந்த ஒரு நிதி, சட்டம், வரி அல்லது முதலீடு சார்ந்த ஆலோசனை இல்லை. ஒவ்வொரு வழக்குக்கும் ஏற்ப உண்மைகள் மாறுபடலாம். கடன் தொடர்பான முடிவுகளுக்கு, நேரடியாக ஒரு RBI-regulated lender அல்லது RBI-recognised credit counsellor-ஐ அணுகவும். வரிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஒரு தகுதி வாய்ந்த Chartered Accountant-ஐ அணுகவும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், RBI circulars மற்றும் வரிகள் தொடர்பான தகவல்கள் ஜூன் 2026-ன் படி சரியானவை, இவை பின்நாட்களில் மாற்றப்படலாம் என்பதால் செயல்படுவதிற்கு முன் எப்போதும் முதன்மை ஆதாரத்தை சரிபார்க்கவும்.